History

College Day Celebration

Our School Is Closed

WhatsApp Image 2025-02-21 at 9.53.25 AM.jpeg
page-header-1900x320.jpeg
Slide

பாடசாலை சுருக்க வரலாறு

தி/தி/ஸாஹிறா கல்லூரி கடந்த 2023.03.01 ஆந் திகதியுடன் தனது 66 வருடத்தைப் பூர்த்தி செய்துள்ளது. அந்த வகையில் அதன் வேண்டியதாகும். வரலாறு மற்றும் சாதனைகள் நோக்கப்பட 1947 ஆம் ஆண்டு. மசூதி வீதியிலுள்ள மதுரஸத்துல் ரஸாக்கியாவில் ஜனாப்.எஸ்.எம்.ஏ.ஜமால்தீன் ஹாஜியார் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை 1950 ஆம் ஆண்டில், தற்பொழுது தி/தி/ஸாஹிறா கல்லூரி, இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது. தனது சொந்த செலவில் கூடாரம் அமைத்து பாடசாலையை அவர் ஆரம்பித்தார். அப்பாடசாலையில் கற்பித்து வந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கி வந்ததுடன், ஏழை மாணவர்களுக்கும் உதவிகள் பல செய்து வந்தார். காலப் போக்கில் பாடசாலைக்கு முன்னால் அமையப் பெற்ற தனியாருக்குச் சொந்தமான மூன்று காணிகளையும் பாடசாலைக்கு உரித்தாக்கப்பட்டு, அதன் நிலப்பரப்பு விஸ்தரிக்கப்பட்டது. பிற்காலத்தில் சட்டத்தரணி, ஜனாப்.ஓ.எல்.எம்.இஸ்மாயில், அல்ஹாஜ்.தாவூத் மரைக்கார் போன்றவர்களும் இப்பணிகளுக்குப் பக்க பலமாக இருந்து செயற்பட்டுள்ளனர். 1957.03.01 ஆந் திகதி அரசினர் முஸ்லிம் பெண்கள் பாடசாலையாகப் பதிவு செய்யப்பட்ட இக்கல்லூரி 1980.01.01 ஆந் திகதி திருகோணமலை முஸ்லிம் மகா வித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டது. 1996.11.25 ஆந் திகதி தி/தி/ஸாஹிறா மகா வித்தியாலயம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு. 2004.05.01 ஆந் திகதி 1AB பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.

திருகோணமலை தொகுதியிலும், திருகோணமலை வலயத்திலும் முதல் 1AB முஸ்லிம் பாடசாலை என்ற பெருமை இக்கல்லூரிக்கு உண்டு. 2013.08.14 ஆந் திகதி தற்போது வழங்கி வரும் தி/தி/ஸாஹிறா கல்லூரி என்ற நாமத்தைப் பெற்றது. இன்று திருகோணமலை மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களிலிருந்தும் மாணவர்கள் கற்கக்கூடிய பிரபல பாடசாலையாகத் திகழ்கிறது. 
தி/தி/ஸாஹிறா கல்லூரியின் வரலாற்றில் கடமையாற்றிய அதிபர்கள் வருமாறு..... 

01. திரு.கே.சோமசுந்தரம்             1957 - 1958

02. திருமதி.பீ.குமாரசாமி              1958 - 1959

03. ஜனாபா பல்கீஸ் அஸீஸ்         1959 - 1968 

04. ஜனாப்.ஏ.ஏ.ஆதம் பாவா          1968 - 1970 

05. ஜனாப்.எஸ்.எஸ்.முகம்மது       1970 - 1971 

06. ஜனாப்.ஏ.ஆர்.இல்யாஸ்            1971 - 1972 

07. ஜனாப்.எம்.ஏ.ஜப்பார்                 1972 - 1978 

08. ஜனாப்.எஸ்.எம்.மக்கீன்             1978 - 1981

தி/தி/ஸாஹிறா கல்லூரியின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்பட்ட காலமாக அதிபர். ஜனாப்.ஏ.அன்வர்தீன் (1990 1996) அவர்களின் காலத்தைக் குறிப்பிடலாம். அதன் பின்னர் இக்கல்லூரியைப் பொறுப்பேற்று இரண்டு தசாப்த காலம் அதிபராகக் கடமையாற்றிய ஜனாப்.எஸ்.எம்.முகமட் அலி (1996 2016) அவர்களது காலத்தில் கல்வி, இணைப்பாடவிதானம், பௌதீக வளம் என்பனவற்றில் பாரிய வளர்ச்சிப் போக்கினை அவதானிக்க முடிகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் இயங்கி வரும் பிரபல பாடசாலைகளுள் ஒன்றாக இக்கல்லூரி மாற்றம் பெற்றது. முதன் முதலாக 1968 ஆம் ஆண்டு க.பொ.த(சா.த) ஆரம்பிக்கப்பட்டதுடன் 1980.01.25 ஆந் திகதி கலைப் பிரிவும், 1994.01.31 ஆந் திகதி வர்த்தகப் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது. பல கல்விமான்கள், சமூக சிந்தனையாளர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்களின் அயராத முயற்சியின் காரணமாக 2005.04.18 ஆந் திகதி க.பொ.த.(உ.த) விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையின் சிறந்த பெறுபேறாக 2014 ஆம் வருடத்தைக் குறிப்பிடலாம். 13 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு (176) மேல் சித்தியடைந்து சாதனை படைத்தனர். க.பொ.த.(சா.த) பரீடசையில் முதல் சிறந்த பெறுபேறாக 1994 ஆம் ஆண்டு 8D சித்திகளைப் பெற்ற செல்வன் எம்.எச்.றிஸ்வான் என்ற மாணவனின் பரீட்சைப் பெறுபேற்றைக் குறிப்பிடலாம்.

2005 ஆம் ஆண்டு பௌதீக விஞ்ஞானப் பிரிவில் மூன்று மாணவர்களுடனும், உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் ஏழு மாணவர்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட எமது கல்லூரியின் விஞ்ஞானப் பிரிவின் முதல் பெறுபேறே வெற்றிகரமாக அமைந்தது. பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் 5 10 மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது. அதில், செல்வி.எஸ்.எச்.ஆர்.பர்வின் என்ற மாணவி பொறியியல்-II துறைக்குத் தெரிவு செய்யப்பட்டு, கல்லூரியின் வரலாற்றில் முதல் தடம் பதித்தார். மருத்துவத் துறையின் முதலாவது பிரவேசமாக 2010 ஆம் ஆண்டு திகழ்கிறது. செல்வன்.ஐ.எம்.ஹாரித், செல்வன்.ஏ.கே.எம்.நஸ்மி ஆகிய மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். உயிரியல் விஞ்ஞானப் பிரிவின் முதல் சிறந்த பெறுபேறாக 2013 ஆம் வருடம் செல்வி.ஐ.எஸ்.பாத்திமா றுஸ்லா என்ற மாணவியின் பரீட்சைப் பெறுபேற்றைக் குறிப்பிடலாம். இம்மாணவி மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும், (மாகாண மட்டம் முதல்) தேசிய மட்டத்தில் 71 ஆம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்தார். பௌதீக விஞ்ஞானப் பிரிவில் முதல் சிறந்த பெறுபேறாக 2015 ஆம் வருடம் செல்வன்.S.மொகமட் ஷாம் என்ற மாணவனின் பரீட்சைப் பெறுபேற்றைக் குறிப்பிடலாம். அவர் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும் தேசிய மட்டத்தில் 37 ஆம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்தார். 
2005 ஆம் ஆண்டு, ஆரம்பித்த க.பொ.த.(உ.த) விஞ்ஞானப் பிரிவு மிகக் குறுகிய காலத்தில் 2016 ஆம் ஆண்டு வரலாற்றுச் சாதனை படைத்தது. ஆமாம். தேசிய மட்டத்தில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றதுததான் அச்சாதனையாகும்.