உலகளும் ரஹ்மானை உளமார போற்றுவோம். மறை தந்த நபி நாதர் வழி நின்று வாழ்த்துவோம். ஞானம் தேடுவோம் கல்வி நாளும் தேடுவோம். திருமலையில் ஸா ஹிராவில் கற்ற கல்வி ஞானம் நாளை ஆஹிராவில் நம் அருளை காணும் பகுத்தறிவு பூ மலரும் சோலை இல்மை தொகுதுனர்ந்து கற்பதே நம் வேலை ஆர்வமுடன் நாளும் இங்கு ஒன்றாக கூடி ஆரமுத தீன் படிப்போம் நாடி (உலகளும் ரஹ்மான்) அறிவு தரும் ஆசிரியர் என்றும் உயர் ஏணி எம்மை ஆசியுடன் கரை சேர்க்கும் தோணி நேசமுடன் அவர் நிழலை தொடர்வோம் பாச மலர் கூட்டமென தொடர்வோம் மாணவர் நாம் ஒரிங்கினைந்து ஒன்றினையும் போது இறை ஞானம் அது கொண்டு வரும் தூது (உலகளும் ரஹ்மான்)







